தருமபுரி, ஜனவரி 7 –
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் அமைந்துள்ள சித்தேரி கிராமக் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவமனையில், பாலார் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள், RAWE (Rural Agricultural Work Experience) திட்டத்தின் ஒரு பகுதியாகப் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் போது, கால்நடை மருத்துவர் டாக்டர் சௌமியா அவர்கள், விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் மாட்டினங்களில் செயற்கை கருவூட்டல் (Artificial Insemination) முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மாடுகளின் இன மேம்பாடு, பால் உற்பத்தி அதிகரிப்பு, நோய் பரவல் கட்டுப்பாடு மற்றும் செயற்கை கருவூட்டலின் பயன்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
மேலும், செயற்கை கருவூட்டல் செய்யும் நடைமுறை, சரியான நேரத் தேர்வு, கருவூட்டலுக்குப் பிந்தைய பராமரிப்பு முறைகள் ஆகியவை குறித்த நேரடி செயல்முறை விளக்கமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி மூலம் விவசாயிகள் பயனடைந்ததுடன், மாணவர்கள் சிறந்த கள அனுபவத்தைப் பெற்றனர்.



