மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவதரித்த நாளான இன்று அறுபதாவது ஆண்டு ஜென்ம நட்சத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நகர் மன்ற தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு அனைவருக்கும் அன்னதானத்தை வழங்கினார். இந்த நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ் , திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், நகர் மன்ற துணைத் தலைவர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



