பரமக்குடி,பிப்.28:. பரமக்குடி என்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மகா சிவராத்திரி முன்னிட்டு குலதெய்வங்களை வழிபட்ட பக்தர்கள்.
பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகள் உள்ள கிராமங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வங்களில் வழிபாடுகள் நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள கலையூர் கிராமத்தில் இருளப்பா சுவாமி திருக்கோயிலில், அதன் குடிகள் சேர்ந்து விடிய விடிய சாமியாடி பயறு வகைகள் மற்றும் இனிப்புகளை படைத்து வழிபட்டனர்.கருமலையான் திருக்கோயிலில் அதன் குடிகள் சேர்ந்து சாமி தரிசனம் செய்தனர். கள்ளிக்குடி சிவன் கோயிலில் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது குடிமக்கள் விடிய விடிய பயிறு மற்றும் இனிப்பு வகைகளை படையெல்லாக படைத்து சாமி தரிசனம் செய்தனர் காலையில் பால்குடம் மற்றும் வேல் எடுத்து பக்தர்கள் நேற்று கடன் செலுத்தினர். காட்டுபரமக்குடி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ திருவேட்டை உடைய அய்யனார் கோவில் மாசி மகா சிவராத்திரி விழா நடைபெற்றது, யாகசாலையுடன் தொடங்கிய சிவராத்திரியை தொடர்ந்து விடிய விடிய பொதுமக்கள் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து மூன்று வேளை அன்னதானம் நடைபெற்றது.
பரமக்குடி நகர் சிங்காரத்தோப்பு அருள்மிகு ஸ்ரீ கருப்பணசாமி திருக்கோவில் 118 ஆம் ஆண்டு ஸ்ரீ மகாசிவராத்திரி திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் திருவிழாவில் கருப்பணசாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரிவார தெய்வங்களாக இருளாயி, இருளப்ப சுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கருப்பண்ணசாமி அருளைப் பெற்றனர்.இறுதி நாளான நேற்று, கோயில் நிர்வாகத்தின் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கருப்பணசாமி திருக்கோவில் மேனேஜிங் டிரஸ்டி பூப்பாண்டின், தலைவர் கார்த்திகேயன், செயலாளர் முருகன், பொருளாளர் ராமு, கௌரவ தலைவர் பரசுராமன் ஆகியோர் செய்திருந்தனர் .பரமக்குடி சுற்றுவட்டார பகுதியில் மகா சிவராத்திரிக்கு வெளியூரில் இருந்து அதிகமான பக்தர்கள் வந்ததால் பரமக்குடி நகர் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பட விளக்கம்
பரமக்குடி ஓட்டப்பாலம் ஸ்ரீ கருப்பணசாமி திருக்கோவிலில் மாசி மகா திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.