தஞ்சாவூர் ஜூன் 5.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத் தில் உள்ள சரஸ்வதி மகால் நூலக த்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் மற்றும் செயல் பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை யில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
அப்போது அவர் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்தும் மற்றும் பதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். அவர் அச்சகத்தின் மூலம் புத்தகங்களை அச்சிடும் பணி நடைபெற்று வருவதையும், ஓலை சுவடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ள்ளதையும், பராமரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தொடர்ந்து அவர் சரஸ்வதி மகால் நூலகத்தில் மேற்கொள்ள வேண்டி ய வளர்ச்சிப் பணிகள் மற்றும் நூலகத்தின் வாசகர் பிரிவு, அருங்காட்சியகம், விற்பனை பிரிவு சரஸ்வதி மகால் நூலக ஒளி ஒலி காட்சியகம் போன்றவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
ஆய்வின் போது சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலர் மார்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



