தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . அந்த வகையில் மயிலாடுதுறை மத்திய ஒன்றிய செயலாளர் ஞான இமையநாதன் ஏற்பாட்டில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் உள்ள அருமை இல்லம் காப்பகத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு அறுசுவை மதிய உணவினை வழங்கினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நூறாண்டு காலம் சிறப்பாக வாழ வேண்டும் என ஆதவற்றோர்கள் வாழ்த்தி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் காலி காந்தி ஒன்றிய துணை செயலாளர் கார்த்திகேயன் சந்திர வடிவம் ராஜா அற்புதராஜ் மாவட்ட பிரதிநிதி பாரஸ் கண்ணன் ஆர் கே சரவணன் தொமுச தொழிற்சங்க தலைவர் இளங்கோவன் சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் உதய ராமன் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் ஆர் ஆர் பாபு இளைஞரணி நிர்வாகிகள் நேதாஜி மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



