நாகர்கோவில் ஜூலை 22
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், மின் கட்டண உயர்வை கண்டித்தும் மண்டல செயலாளர் பெல்வின் ஜோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், சட்ட ஒழுங்கு சீர்கேட்டை பாதுகாக்க தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருட்களின் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள், சாதிய மோதல்கள், வன்முறைத் தாக்குதல்கள், ரெளடிகளின் அட்டூழியம், கூலிப்படை கலாச்சாரம், கருத்துரிமைக்கு எதிரான அரசின் அடக்குமுறைகள் ஆகியவற்றால் முற்றுமுழுதாகச் சீரழிந்து போயுள்ள சட்டம்-ஒழுங்கைக் காக்கத் தவறியதைக் கண்டித்தும், திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி, அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்ட சார்பாக நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிகட் ராஜ் முன்னிலை வகித்தார்
மற்றும் மண்டல செயலாளர் பெல்வின் ஜோ தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்வில் கன்னியாகுமரி அனைத்து மாநில மண்டல மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் 300க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.