ராமநாதபுரம், டிச.25-
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை பதவிநீக்கம் செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.மங்கலத்தில் மமக மற்றும் தமுமுக சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் அவர் பதவி விலக கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும்
ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ஆர் எஸ் மங்கலம் பேரூரில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம் வரவேற்புரை நிகழ்த்தினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ் புலிகள் கட்சியின் பொறுப்பாளர் தமிழ் முருகன் உட்பட பலர் கண்டன உரை நிகழ்த்தினர். மாவட்ட துணை நிர்வாகிகள் உபயதுல்லா சகுபர், இளைஞரணி ரிஸ்வான், பேரூர் தலைவர் காதர் பரக்கத் அலி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.