தேனி மாவட்டம், ஜூன் -22
தேனி மாவட்டம், உத்தமபாளையம் மற்றும் அம்பாசமுத்திரத்தில் மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்படியான நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கு காரணமான ஒன்றிய அரசைக் கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி தலைமையில் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முருகன் வீரணன் சத்தீஸ் ஹரி விஜய் மற்றும் பலர் கலந்துகொண்டனர்



