நாகர்கோவில் ஜூலை 31
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன 500-க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் கலந்து கொண்டனர்,மேலும் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ சின்னதுரை கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் துவங்கி வைத்தார்,பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்”தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் விவசாய பெரு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை முன் நிறுத்தி வாக்கு சேகரித்தனர்,தற்போது வெற்றி பெற்று அதை நடைமுறைப் படுத்தவில்லை, ஊரக வேலை திட்டத்தில் வேலை இன்றி திண்டாடி வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனே வேலை வழங்க வேண்டும்,
நீர் வரத்து கால்வாய்களை பராமரித்தல், குளம் குட்டைகளை தூர்வாருதல் உள்ளிட்ட நீர்நிலை சார்ந்த பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை வழங்க வேண்டும். அரசு அறிவித்த தின ஊதிய தொகையான 319 ரூபாயை குறையாமல் வழங்கிட வேண்டும்,தேர்தல் வாக்குறுதி படி வருடத்திற்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்டவட்டை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.