ஆரல்வாய்மொழி மார்ச் 20
குமரி மாவட்ட இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து உடனடியாக தீர்ப்பு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி செண்பகராமன் புதூரில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்திர்க்கு மாவட்ட துணைத்தலைவர் தோழியர் ஐ.தங்கம் தலைமை தாங்கினார், இன்பமனி முன்னிலை வகித்தார், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்வராணி பெண்கள் தற்போது பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் நிலையை விவரித்து பேசினார். மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.ஷோபணா இளம் சிறுமிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதை விவரித்தார்.இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்குமார், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட துணைத்தலைவர் ஆரல் பகவதி,ஆரல் குருசாமி ஆரல் சுப்பிரமணியம், பேராசிரியர் சுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தோவாளை தாலுகா செயலாளர் எஸ்.கல்யாண சுந்தரம் ஆசிரியர் நாகப்பன் உட்பட திரளான தோழியர்கள் கலந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தோழர் எஸ்.அனில்குமார் முடித்து வைத்தார்.



