நாகர்கோவில் ஜூன் 18
குமரி மாவட்டம் பறக்கை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இராஜாக்கமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலியில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வந்த தம்பதிகளுக்கு அடைக்கலம் வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தை சூறையாடிய சாதி ஆதிக்க வெறியர்களை கண்டித்தும் சாதி வெறி கொடுமைகளை இரும்பு கரம் கொண்டு அடக்கிட தமிழக அரசை வலியுறுத்தியும் நேற்று பறக்கை சந்திப்பில் இராஜாக்கமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.டி.ராஜகுமார் தலைமை தாங்கினார் . ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.சிவகோபன், எஸ்.மிக்கேல்நாயகி, எஸ்.எஸ்.பிள்ளை, ஆர்.குமரேசன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.பி.பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் முடித்து வைத்து பேசினார். இதில் சுப்பிரமணியம், முத்துக்கிருஷ்ணன்,நாராயணன்,ஜெபமணி, மனோகரன், பௌலி, ராதாகிருஷ்ணன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.