பழனி மே 1
பழனியில் இந்திய ஜனநாயக கட்சியின் 16 – ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டப்பட்டது.
இந்திய ஜனநாயக கட்சியின் 16 – ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சிக் கொள்கைகளை தொகுதி மக்களிடம் கொண்டு சேர்க்க பழனி சட்டமன்ற தொகுதி தலைவர் ஏ.ஜோஸ்வா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டப்பட்டது.
இந்நிகழ்வில்பழனி சட்டமன்றத் தொகுதி செயலாளர் மனோகரன், பழனி சட்டமன்றத் தொகுதி ஒன்றிய தலைவர் லக்னகுமார், பழனி சட்டமன்றத் தொகுதி மகளிர் அணி துணை செயலாளர் மாரியம்மாள்,பழனி சட்டமன்ற தொகுதி மகளிர் அணி துணை செயலாளர் மலர்விழி, பழனி சட்டமன்றத் தொகுதி போராட்ட குழு துணை செயலாளர் ஆபிரகாம்,தொண்டரணி செயலாளர் இப்ராகிம், மற்றும் நிர்வாகிகள் கதிர்வேல் ,சாகுல், அஜ்மீர், முபாரக், பரணி, சுகுமாரன, ஆதிமூலம், அஜித், சக்திவேல், தீனதயாளன், கவிதா ஆகியோர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.