களியக்காவிளை, நவ, 13 –
களியக்காவிளை அருகே மாற்றுத்திறனாழியை தாக்கியதில் காயமடைந்து சிகிட்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.
மெதுகும்மல் மூவேலிக்கரை தெக்கே வீட்டு விளை பகுதியை சார்ந்தவர் சுரேஷ் சுகுமாரன்(42) இவர் மாற்றுத்திறனாழி ஆகும். ஆட்டோ ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.
இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மது போதையில் வழி தெரியாமல் ஒரு வீட்டின் கதவினை தட்டியுள்ளார். இதனால் அந்த வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதியினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இவர்களின் அடி உதைபட்டு வழி தெரியாமல் மற்றொரு வீட்டின் கதவினை தட்டியுள்ளார். அந்த வீட்டின் உரிமையாளர் சுரேஷ் (20) இவரை பலமாக தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் இவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்காக சேர்த்துள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வந்த மாற்றுத்திறனாழி சிகிட்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.