திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கமும், திருநெல்வேலி காவேரி மருத்துவமனையும் இணைந்து தொடர்ந்து கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கு எதிராக ஹெச் பி வி (HPV) தடுப்பூசியை இலவசமாக வழங்கிக் கொண்டு வருகிறார்கள். சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் முதல் கட்ட தடுப்பூசி பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் திண்டுக்கல் தர்ஷினி மருத்துவமனையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடப்பட்டது.
இதன் மூலம் அவர்கள் அனைவரும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.இக்குழந்தைகளுக்கு நவம்பர் மாதத்தில் இரண்டாம் கட்டத் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்விழாவில் குயின் சிட்டி சங்கத் தலைவர் Rtn.கவிதா செந்தில்குமார், செயலர் Rtn.பார்கவி சந்தோஷ், செர்வி க்யூர் திட்டத்தின் சேர்மன் டாக்டர். Rtn.பாலசுந்தரி, 2025-2026 ஆண்டின் குயின்சிட்டி தலைவர் ராஜாத்தி, துணை ஆளுநர் Rtn.M. செல்வக்கனி, காவேரி மருத்துவ குழுமத்தின் CSR டிபார்ட்மென்ட் பொறுப்பாளர் டாக்டர். மனோஜ் மற்றும் குயின் சிட்டி சங்க உறுப்பினர்கள், கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்கள். இத்திட்டத்தை பற்றி அரசாங்கம் முன்னெடுப்பதற்கு முன்னமே அதிக விலையுள்ள இந்த ஹெச்பிவி HPV தடுப்பூசியை இலவசமாக தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் குயின் சிட்டி சங்கத்தின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்று பொதுமக்களும், பயனாளிகளும் தெரிவித்தார்கள். மூன்றாவது கட்ட தடுப்பூசி போட்டதிலிருந்து தங்கள் குழந்தைகள் கருப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு வளையத்திற்குள் வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது என்று பயனாளிகள் தெரிவித்தார்கள்.
ஒவ்வொரு மாதமும் ஏற்கனவே முதல் இரண்டு கட்டத் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு மூன்றாம் கட்டத் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதன் மூலம் நிறைய குழந்தைகள் பாதுகாக்கப்பவார்கள் என்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் இல்லாத உலகை உருவாக்க இந்த திட்டம் சிறிய துவக்கமாக இருக்கும் என்று குயின் சிட்டி சங்கத்தினர் தெரிவித்தார்கள்.



