By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
திண்டுக்கல்மாவட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

Last updated: December 13, 2024 10:39 am
December 13, 2024
61 Views
Share
SHARE

திண்டுக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மத்திய, மாநில அரசுகளின் வணிக விரோத சட்டங்களை திரும்ப பெறக் கோரி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட மண்டல தலைவர் D.கிருபாகரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட செயல் தலைவர் S.முகமதுகனி வரவேற்புரை ஆற்றினார். திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் G. சுந்தரராஜன், முன்னாள் தலைவர் SKC குப்புசாமி, முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட  செயலாளர் S.நஜீர்சேட் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளக்க உரையாற்றிய போது பேசியதாவது,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் என்பது சிறு, குறு, அடித்தட்டு வணிகர்களையும், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்த கட்டமைப்பைக் கொண்ட வணிகர்களின் கூட்டமைப்பு. தமிழகம் முழுவதும் 31 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பேரமைப்பு ஆகும்.

அண்மையில் மத்திய அரசின் அறிவிப்பு ஆணை எண். 9/2024-ன் மூலம் அறிவித்துள்ள கடை வாடகை மீதான 18 சதவீதம் GST வரி என்பது ஏறத்தாழ 70 சதவீதம் வணிகர்களை மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் நடவடிக்கை. அதைப்போலவே தமிழக அரசு அறிவித்துள்ள ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்துவரி உயர்வு என்பது கட்டிட உரிமையாளர்களுக்குச் சுமையாக மாறி, வணிக கட்டிட வாடகை உயர்வுக்கும் வழி வகுத்து வணிகர்களையும், நுகர்வோர்களையும் பெருமளவு பாதிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவே தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் A.M. விக்கிரமராஜா அவர்களின் ஒப்புதலோடு சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாவட்டத் தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டமாக அறிவித்து, கண்டன முழக்கங்கள் முழங்கிட, மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய ,மாநில அரசுகளின் வணிகர்களின் மீதான வணிக விரோத சட்டங்களையும், நடவடிக்கைகளையும் கண்டித்து வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட கோரிக்கைகளான 

மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18 சதவீதம் GST வரி விதிப்பை திரும்பப் பெற்றிட வலியுறுத்தியும், மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்பப் பெற்றிட வலியுறுத்தியும்,

வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும் , குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவித்திட வலியுறுத்தியும், மாதாந்திர மின் கட்டண அமலாக்கம் நடைமுறைப்படுத்திடவும்,

வணிக உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தலை உடனடியாக நடைமுறைபடுத்திட  கோரியும் , மேலும் அதிகரித்து வரும் சமூக விரோதிகள் ரவுடிகள் மாமுல் கலாச்சாரங்களை முடிவுக்கு கொண்டு வர வணிகர்கள் தொழில்துறையினர் தயாரிப்பாளர்களுக்கு என சிறப்பு வணிகர் பாதுகாப்பு சட்டம் உடனடியாக இயற்றிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது  மத்திய, மாநில அரசுகளின் வணிக விரோத சட்டங்களை திரும்ப பெறக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், வணிகவரித்துறை அதிகாரி ஆகியோரிடம் மத்திய, மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வரி சம்பந்தமாக மனு  அளித்தனர்.

 ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் S.கருணாகரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
கலசலிங்கம் பல்கலையில் திரவ இயக்கவியலின் சர்வதேச மாநாடு
தக்கலையில் போலீஸ்காரரை மோதி தள்ளிவிட்டு மாயமான கார்
50 இடங்களில் கொடி ஏற்றம் நடைபெறும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

லிங்கா குளோபல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா

September 9, 2024
77 Views
உணவு பாதுகாப்புத்துறை ஆணையர்
உலக அமைதிக்காக வேண்டி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வேள்வி
அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் முதலிடம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account