ஈரோடு மே 1
ஈரோடு வில்லரசம்பட்டி நால் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 3 ம் மண்டலம் சார்பில் மக்களை தேடி மாநகராட்சி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.துணை மேயர் செல்வராஜ் மண்டல தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பொது மக்களுக்கு மாந கராட்சியால் வழங்கப்படும் சேவைகளை துரிதப்படுத்துவதற்காக நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சொத்துவரி காலியிடம் மற்றும் சொத்துவரி பெயர் மாற்றம் புதிய குடிநீர் இணைப்பு, புதிய பாதாள சாக் கடை இணைப்பு சொத்து வரி மற்றும் பெயர் திருத்தம் ஆகியவை குறித்த மனுக்களை பொது மக்கள் மேயரிடம் மனு கொடுத்தனர்.
இதில் மாநகராட்சி பொறியாளர் முருகேசன் கவுன்சிலர்கள் மணிகண்ட ராஜா குமார வேல் உட்பட கலந்து கொண்டனர்.