பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு 96 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் இதன்பிறகு பட்டங்கள் பெற்ற மாணவ மாணவிகள் அமைச்சருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர் இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார் மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் செந்தில் செங்கோடன் உறைவிட மருத்துவ அதிகாரி ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்



