குளச்சல் ஜன 23
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி குளச்சல் நகர ஆலோசனை கூட்டம் நேற்று மாலை அண்ணாசிலை தமுமுக நகர அலுவலகத்தில் தமுமுக
நகர தலைவர் மாஹின் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாவட்டச் செயலாளர் நவாஸ் கான், மமக மாவட்டச் மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக் கலந்து கொண்டார். மேலும் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் பயாஸ் ஹக்கீம் .மமக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குளச்சல் நிஜாம், தமுமுக குளச்சல் நகரச் செயலாளர் ரிபாய் கான், பொருளர் யாசர் அரபாத் முன்னாள் மாவட்ட செயலாளர் சபீக், துணை செயலாளர் சியாத் ஆகியோர் கலந்துக் கொண்டனர்..
கூட்டத்தில் பல்வேறு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைகள் :- ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள
வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து அடுத்த மாதம் பிப்ரவரி 15 மமக மாவட்ட இளைஞரணி சார்பாக குளச்சலில் வைத்து
பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் எனவும்,
குளச்சல் நகராட்சிக்குட்பட்ட 15 வது வார்டில் அமையவிருக்கும் சிறுவர் பூங்காவிற்கு கண்ணிமிகு காயிதே மில்லத் பெயர் சூட்ட வேண்டும் எனவும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.