கிருஷ்ணகிரி அக் 4:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.சின்னராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் அக்டோபர் 20ஆம் தேதி காவேரிப்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு வருகை தரும்
கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், கழக வளர்ச்சி குறித்தும் பல்வேறு ஒன்றியங்களில் கொடியேற்றுதல் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மேலும் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திற்கு கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு பொதுமக்களை அழைத்து வந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தேமுதிகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், முப்பெரும் விழா நிகழ்ச்சியை சிறப்பிப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் K.R.சின்னராஜ், மாவட்ட பொருளாளர் ஓம்சாந்தி சங்கர், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் முருகேசன், மாவட்டத் துணைச் செயலாளர் எல்.முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் வி.லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரஞ்சித் குமார், காதர், வேலு, கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய்வல்லரசு, பர்கூர் ஒன்றிய செயலாளர் கே.வி.கோவிந்தராஜ், பர்கூர் ஒன்றிய பொறுப்பாளர் பழனி, போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் அப்பாபிள்ளை, மத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், விவேகானந்தன், ஊத்தங்கரை கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல், மேற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், ஊத்தங்கரை பேரூராட்சி செயலாளர் துரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்ரமணியம், மற்றும் அவைத்தலைவர், பொருளாளர், துணை செயலாளர், மாவட்ட பிரதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



