நாகர்கோவில் ஜூலை 29
மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் பாரபட்சத்துடன் மக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்ததை கண்டித்து . நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மணவாளக்குறிச்சி ஐ ஆர் இ மணல் ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே. டி உதயம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பேசினார் . அப்போது அவர் பேசியதாவது : மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு எப்படி ஒரு ஆட்சி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக, பாஜக ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள கூட்டணி கட்சிகளுக்காக ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர், இது மக்களுக்கான பட்ஜெட் அல்ல, மக்களின் நலனுக்கான பட்ஜெட்டாக இல்லை, இதை கண்டித்து நமது கூட்டணி கட்சிகள் தமிழக முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் .பாஜக அரசு இவ்வாறான செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் போராட்டம் கடுமையானதாக இருக்கும் இவ்வாறு அவர் பேசினார் .
பின்னர் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் மாநில, மாவட்ட, நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், காங்கிரஸ் துணை அமைப்பு தலைவர்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.