ஊத்தங்கரையில் கிராம காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகியோரின் ஆலோசனை பேரில் ஊத்தங்கரையில் மாதேஸ்வரா நாயுடு ஹால் தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் ஜே எஸ் ஆறுமுகம் தலைமையில் வட்டாரத் தலைவர்கள் தனஞ்செயன், திருமால், ரவி, நகரத் தலைவர் விஜயகுமார், சட்டமன்ற மறு சீரமைப்பு அமைப்பாளர்கள் வெங்கடேஷ், சசி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமானஅருள் பெத்தையா, பாராளுமன்ற கிராம காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு பொறுப்பாளர் மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் மற்றும் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு, கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்தும் எதிர்வரும் தேர்தல் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது
இந்த நிகழ்வில்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் உறுப்பினர் துரை என்கின்ற துரைசாமி, முன்னாள் நகரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கஞ்சனூர் கேசவன், மற்றும் வினோத், இளையராஜா, லோகநாதன், சூளகிரி கிளி வர்மன், அண்ணாதுரை, ராமு, சிங்காரப்பேட்டை மணி, காமராஜ், அனுமந்தராவ், ஆனந்தூர் ராமன், மத்தூர் வேடியப்பன், சாதிக்பாஷா, பாலு, உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்