நாகர்கோவில் – ஜூன்-19
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்பியிமான ராகுல் காந்தியின் 54வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை காங்கிரசார் மிக விமர்சையாக கொண்டாடினர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் சார்பில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் தலைமையில் நாகர்கோவில் காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து கேக் வெட்டி ராகுல் காந்தி பிறந்த நாளை கொண்டாடினர் இதில் கிழக்கு மாவட்ட ஜஎன்டியூ தலைவர் டாக்டர் சிவகுமார் உட்பட பெண்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர் . மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.