மயிலாடுதுறை பிப்.6
மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவுநீர் சத்திய வானன் வாய்க்காலில் கலப்பதை கண்டித்து மக்கள் மசோதா கட்சி ஆர்ப்பாட்டம்.
மயிலாடு துறை மாவட்டம், செம்பனார் கோவிலில் சத்தியவானன் வாய்க்காலில் மயிலாடுதுறையிலிருந்து பாதாள சாக்கடை கலப்பதை கண்டித்து மக்கள் மசோதா கட்சி ஆர்ப்பாட்டம் செய்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் மசோதா கட்சி நிறுவனர் மாயா வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ரூபன் முன்னிலை வசித்தார். சத்திய வானன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதால், குடிநீர் பாழ்படுகிறது என்றும், ஆடு மாடுகளை குளிப்பாட்ட முடியவில்லை என்றும், அதனால் பாதாள சாக்கடை கழிவு நீர் சத்திய வானன் வாய்க்காலில் கலப்பதை தடை செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 500 பேர் கலந்து கொண்டனர் மாவட்ட செயலாளர் சிவசக்தி நன்றி தெரிவித்தார்.