சுசீந்திரம். மே 17
சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன் புதூர் ராமபுரத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் பயனளிகாளின் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளின் பதிவு செய்யும் சிறப்பு முகாமை துவக்கி வைத்தார் இந்த முகாமிற்கு குலசேகரன் புதூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ முகி இ சேவை மையம் கலந்துகொண்டு பயனாளிகள் பதிவு செய்வதற்கான உதவிகளை செய்தனர்
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக குலசேகரன் புதூர் வெள்ளமடம் தேரூர் ராமபுரம் ஆண்டார்குளம் கோட்டவிளை சங்கரன் புதூர் தேவகுளம் கண்ணன் குளம் உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வந்து பதிவு செய்து சென்றனர்