நீலகிரி. மார்ச். 27
ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்கள் 6. ஆயிரம் வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8. ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென ஐகோர்ட் உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி கடந்த ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ- பாஸ் முறை கட்டாயமென அறிவிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள், வணிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், விவசாயிகள் ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு சங்கங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இ- பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள்முதல் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நிலையில் வருகிற ஒன்றாம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் 6. ஆயிரம் வாகனங்களும் , சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8. ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



