திருவாரூர்
பிப்ரவரி 27
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டப்பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வை.மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு பதினோரு வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது…
ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், காப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக வளைகாப்பு ஏற்படுத்த அறிவியல் பூர்வமான நிகழ்ச்சி தான் இந்த சமுதாய வளைகாப்பு.
வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட கூடாது என்ற தொலை நோக்கு பார்வையுடன் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். மேலும் உங்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு போன்ற ஊட்டச்சத்து நிறைந்துள்ள பொருட்கள் வழங்குவதை நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்காகவும், குழந்தையின் வளர்ச்சியாகவும் நீங்கள் சாப்பிட வேண்டும்.
இந்நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் எந்தவித துன்பங்களையும் நீங்கள் நினைத்து வருத்தப்படக்கூடாது. அங்கான்வாடி மையங்களுக்கும், சுகாதார மையத்திற்க்கும் பரிசோதனைக்கு ஒவ்வொரு மாதமும் தவறாது செல்ல வேண்டும். 2-க்கு குழந்தைக்கு மேல் செல்லாமல் நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கோட்பாட்டினை கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மஞ்சள், குங்குமம் செட், வெற்றிலை பாக்கு, பழங்கள், புடவை, சிவப்பு அவல், பேரீச்சை பழம், பொட்டுக்கடலை, வளையல், தாம்பாளம், கடலைமிட்டாய், பூ என 11 வகையான சீர்வரிசை பொருட்களையும், ஐந்து வகையான உணவினையும் மாவட்ட ஆட்சித்தலைவர், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் (பொ) இர.புவனேஸ்வரி, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் மதிவதனா, கொரடாச்சேரி பேரூராட்சித்தலைவர் கலைச்செல்வி செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபு, செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.