தருமபுரி மாவட்டம்
பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசின் கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினரும் பேரூராட்சி கவுன்சிலருமான விசுவநாதன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மனோன்மணி, சிலம்பரசன், சண்முகம், உமாராணி, உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கண்டித்தும், விலைவாசி உயர்வை கைவிடக் கோரியும், பெண்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட கோரியும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்தியும் ஒருவார காலமாக பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தின் போது மலையூர், பிக்கிலி, பாரதிபுரம், ஆலமரத்துப்பட்டி, சிட்லகாரம்பட்டி, மாக்கனூர், பாப்பாரப்பட்டி 8- ஆவது வார்டு பகுதியில் வீடுவீடாக துண்டு பிரசுரம் வழங்கி தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. லோகநாதன் நன்றி கூறினார்.