கல்லூரி மாணவிகள்
இரண்டு பேர் திடீர் மாயம்
குமரியில் போலீஸ் விசாரணை
நாகர்கோவில், மே 6:
தக்கலை அடுத்த பறைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் பாபு. அபுதாபியில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோகினி சந்திரன். (27) கல்லூரி ஒன்றில் நூலகருக்கான ஒரு வருட படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரோகினி சந்திரன், திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மாமனார் கோபாலகிருஷ்ணன், தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரோகிணி சந்திரன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளிச்சந்தை அருகே உள்ள காட்டு விலையை சேர்ந்தவர் 19 வயது நிரம்பிய இளம்பெண். கல்லூரி ஒன்றில் பி பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் திரும்பி வரவில்லை.
உறவினர்கள் தோழிகளிடம் விசாரித்தும் எந்தவித தகவலும் இல்லை. இதை எடுத்து அவரது தந்தை வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.