தஞ்சாவூர், ஆகஸ்ட் 14 –
சென்னையில் தமிழக முதல்வர் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து தஞ்சாவூரில் சட்டபேரவை உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் இத்திட்டத்தை தஞ்சாவூர் வடக்கு வீதியில் தொடங்கி வைத்து முதியோர், மாற்றுத்திறனாளிகளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் அண்ணா. பிரகாஷ், திமுக நிர்வாகிகள் டி எம் ஆர் கார்த்திக், ராஜ்குமார், கௌதமன், தீபன் கந்தவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



