சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு மாணவர்கள் பயிற்சி திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பயிற்சி
05.03.2025 அன்று முதல்
தொடங்கப்பட்டு சுமார் 2 மாதங்களுக்கு மாணவர்கள் அந்த கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
முன்னதாக இத்திட்டத்தை முதன்மை அலுவலர் டாக்டர் ஆர்.பாபு பங்கேற்று துவக்கி வைத்து மாணவர்களுக்கு திட்டத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து திட்டத்தின்
பாட ஆசிரியர் டாக்டர் பா.சுதாகர், உதவி பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விவரித்தனர். திட்டத்தை வழிநடத்த வேளாண்மைக் கல்லூரி மற்றும் மானாவாரி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் ஒரு வட்டத்திற்கு இருவர் என நியமிக்கப்பட்டு அவரவர் துறையில் தொழில் நுட்பத்தை மாணவர்களுக்கு பயல்வித்து, அவற்றை கிராமப்புற விவசாயிகளின் பயிர் நிலங்களில் பயன்படுத்த அறிவுறுத்தபட்டனர். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேளாண் இணை இயக்குனர்
(சிவகங்கை மாவட்டம்). வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண் அதிகாரிகள், துணை வேளாண் அதிகாரிகள்
ஆலோசனையின் பேரில் பயிற்சி மேற்கொண்டு வரும்
வேளாண் மாணவர்கள் காளாப்பூர் கிராமத்தில் ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சியின் அறிமுக விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சேவகபெருமாள், சிவகங்கை தென்னை உற்பத்தியாளர் கம்பெனியின் தலைவர்.
பிரவீன். தோட்டக்கலை உதவி இயக்குனர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். டாக்டர்,சுதாகர் உதவி பேராசிரியர், (வேளாண் விரிவாக்கத்துறை).டாக்டர், ஜெயராமச்சந்திரன் இணை பேராசிரியர், (இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை) வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் செட்டிநாடு ஆகியோர். பங்கேற்று ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சியின் சிறப்பம்சத்தை விவசாயிகளுக்கு கூறினார்கள்.
அதன் பின்னர் பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவிகள்
விவசாயிகளிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு,
ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சியின் பயிற்சி என்றால் என்ன? மற்றும் அதன் நோக்கங்கள் பற்றி விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.
கல்லூரி மாணவிகள் புத்தாக்க பயிற்சி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics