தென்தாமரைகுளம்., டிச. 15 :
அஞ்சுகிராமத்தை அடுத்த நெல்லை மாவட்டம், லெவஞ்சிபுரம் கேப் பொறியில் கல்லூரியில் மாணவர்களின் திறமையை வளர்க்கும் விதமாக கபடி போட்டி நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனர் கிருஷ்ணபிள்ளை, துணை நிறுவனர் அய்யப்ப கார்த்திக் ஆகியோர் வழிகாட்டலின் படி, கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெ. பி. ரெனின் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் தேவ் ஆர்.நியூலின் ஆகியோரின் தலைமையில் போட்டியானது நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட அணிகள் போட்டியில் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் ஜோயல்,ஜெபர்சன் ராஜா, ஜெபிஸ் மற்றும் ரம்யா ஜாய் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இறுதியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசினை சுயம்பு விளையாட்டு அணியும், இரண்டாம் பரிசினை பணக்குடி பள்ளி அணியும், மூன்றாம் பரிசினை அஞ்சுகிராமம் ஜான்ஸ் அக்காடமி அணியும் பெற்றது. மாணவர்களிடம் ஒற்றுமையை ஊக்குவிக்கும் விதமாக போட்டி நடைபெற்றது.