திருப்பத்தூர்:மே:9, திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள விஜய் வித்யாலயா தனியார் பள்ளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து வாகனங்களும் இந்த ஆண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் வாகனங்கள் பேருந்துகள் அனைத்தும் தர சான்றிதழ் உள்ளதா, மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதா, பள்ளி முத்திரை பதிக்கப்பட்டுள்ளதா, கிரில் சரியாக இருக்கின்றதா, அவசர வழி முறைப்படி இருக்கின்றதா, தீயணைப்பு கருவி காலாவதியாகாமல் இருக்கின்றதா, முதல் உதவி பெட்டி வாகனத்தில் இருக்கின்றதா போன்ற பல்வேறு ஆய்வுகள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் திருப்பத்தூர் தீயணைப்பு துறை சார்பில் தீ பிடித்தால் உடனடியாக தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து ஒத்திகை காட்சிகள் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன்,வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர் செல்வம் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ,ஓட்டுநர்கள் உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.