ஊட்டி. பிப்.28.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடர்ந்து அனைத்து பேரூராட்சி பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இது பற்றி பேரூராட்சி பற்றிய வளர்ச்சி திட்டங்கள் பற்றி 2024 – 2025ம். ஆண்டுக்கான சிறந்த பேரூராட்சி வளர்ச்சி பணிகளை முன்னெடுத்துச் சென்று ஆண்டு வரியினங்களை 100% வசூல் செய்தமைக்காக நீலகிரி மாவட்ட கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் அவர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் மூலம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவிக்கப்பட்டார். இது பற்றி கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் குறிப்பிடும்போது அரசு அறிவித்த திட்டப்பணிகள், வளம் மீட்பு பூங்கா மூலம் இயற்கை உரம் தயாரிப்பு, பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதிகள், பிளாஸ்டிக் ஒழிப்பு, முழு சுகாதார தூய்மைப்பணி உள்ளிட்ட சிறப்பான செயல்பாட்டுக்கும் அனைத்து விதமான வரையினங்களை முறையாக 100% வசூல் செய்தமைக்காக இந்த நற்சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பணியாற்றிய பேரூராட்சி ஊழியர்கள் சுகாதார பணியாளர்கள் வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.