நாகர்கோவில் – நவ- 03,
கன்னியாகுமரி அருகே உள்ள வரலாற்று சிறப்பு மிக்க வட்ட கோட்டை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கீழ் இயங்கும் இந்த வட்ட கோட்டை பண்டைய காலத்தில் கடல்வழியாக வரும் எதிரிகளை தாக்குவதற்காக மன்னார் காலத்தில் கட்டப்பட்டதாககும்.
வட்ட வடிவத்தில் முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இந்த கோட்டைக்கு வட்ட கோட்டை என்று பெயர் வரக்காரணம் ஆயிற்று இந்த கோட்டை பாதி கடலிலும், பாதி கரையிலும் அமைந்துள்ளது.
இந்த கோட்டையை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்க்கு வசதியாக தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும்.
இந்த கோட்டையின் மத்தியில் நீச்சல்குளம் ஒன்றும் அமைந்துள்ளது. அதை சுற்றி புல் வெளி பூங்காவும் உள்ளது. படை வீரர்களின் குதிரைகளை கட்டி வைப்பதற்க்காக குதிரை லாயமும் அமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க வட்டக் கோட்டையில் குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா “திடீர் ஆய்வு” மேற்கொண்டார்.
அப்போது வட்டக் கோட்டையை மேலும் அழகு படுத்துவது குறித்தும் , சுற்றுலா பயணிகளுக்கு செய்ய வேண்டிய பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர். நடைபெற்ற இந்த திடீர் ஆய்வின் போது தொல்லியல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.