பரமக்குடி,ஏப். 28:
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நிதி காலநிலை மாற்றத்துறை மானிய கோரிக்கையில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பேசுகையில் ” பரமக்குடியில் தியாகிய இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவித்து ரூ. 3 கோடியில் மணி மண்டபம் கட்டியது, தேவர் திருமகனாரின் தேவர் ஜெயந்திக்கு செல்லும் வாகன நெரிசலை தடுப்பதற்காக பார்த்திபனூரில் புறவழிச்சாலை அமைத்தது, மந்தி வலசையில் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம், பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அதி நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம், பரமக்குடி வாரச்சந்தை பகுதியில் புதிய வணிகவளாக கட்டிடங்கள், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம், நெசவாளர்களுக்கு புதிய ஜவுளி பூங்கா போன்ற எண்ணற்ற திட்டங்களை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பரமக்குடி நகராட்சியே சிறப்பு நிலை நகராட்சியாக மாற்றி, பாதாள சாக்கடை திட்டம், காக்கா தோப்பு எமனேஸ்வரத்தை இணைப்பதற்கு மேம்பாலம், பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையை சிவகங்கை மாவட்ட மக்கள் பயன்படுத்தும் வகையில் காட்டுப்பரமக்குடி வைகை ஆற்றில் மேம்பாலம், பரமக்குடி கல்வி மாவட்டம் தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பெறுவதால் அரசு சார்பில் அரசு இலவச பயிற்சி மையம், பருத்தி நெல் மிளகாய் அதிகம் விளைவதால் பரமக்குடியில் விவசாயிகளுக்கு குளிர் பதன கிடங்கு, அபிராமம் கமுதிக்கு புறவழிச்சாலை, உழவர் சந்தை பகுதியில் சேதம் அடைந்துள்ள கடைகளை மாற்றி புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என என பேசினார். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்கள்.