நாகர்கோவில் டிச 23
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரண்டு நாள் நடைப்பெறும் 42 வது மாவட்ட மற்றும் தேசிய அளவிலான,பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கிறிஸ்மஸ் தின கால் பந்து போட்டி நேற்று இனிதே தொடங்கியது. இப்போட்டியினை நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர்.மேரி பிரின்சி லதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 25 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன,இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ், மற்றும் விருதுகள் வழங்கப்படும், அதேபோன்று போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களையும் பிம்போ கால்பந்து கிளப் சார்பில் கௌரவிக்கப்படுவர் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளார், பிம்போ கால்பந்து கழக செயலாளர்.பாரத் வில்சன்,துணைச்செயலாளர்.ஜெ.இளங்கோ, செயலாளர்.ஆல்பட் ராஜ்குமார், பொருளாளர்.ஜெகன் உள்ளிட்டோர் கால்பந்து போட்டியை வழிநடத்தி வருகின்றனர்.