தஞ்சாவூர் மார்ச் 5.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை பெருந்திருவிழாவுக்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 18 நாட்கள் கொண்டாடப்படுவதும், 15-ம் நாளில் தேரோட்டம் நடைபெறுவது ம் வழக்கம் இதன்படி இக்கோவிலி ல் நிகழாண்டு சித்திரை பெருந் திருவிழாவுக்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் ,அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் சத்தியராஜ் , மேற்பார்வையாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது . முக்கிய விழாவான தேரோட்டம் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழா மே 10ஆம் தேதி நிறைவடைகிறது.