சூலூர் மே 17
கோவை மாவட்டம், வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் நா.நாட்ராயன் என்பவர் மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்த போது ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக கடந்த 19.04.2022 அன்று உயிரிழந்தமைக்காக அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.10,00,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத்தொகை வழங்க தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ரூ.10,00,000/- முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார்.