சென்னை போரூரில்
ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனையில் சாதனை படைத்து வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது கிளைகளை திறந்து வெற்றி கண்டுள்ளது. மேலும், உலகெங்கிலும் பரவியுள்ள தமிழர்களுக்காக www.ramrajcotton.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்தியதோடு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது புதிய கிளையை சென்னை, காரம்பாக்கம், ஆற்காடு சாலையில் தொடங்கி உள்ளது. இதனை, மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த விழாவில் 151வது வார்டு (போரூர்) மாமன்ற உறுப்பினர் ச.சங்கர் கணேஷ், 153 வது வார்டு (போரூர்) மாமன்ற உறுப்பினர் சாந்தி ராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். போரூர், எஸ்.ஆர்.எம்.சி (SRMC) சரக காவல் உதவி ஆணையர் டி.கலியசுந்தரம் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நாதன் ஆர்கேட் உரிமையாளர் எஸ்.குமரேசன் சுவாமிநாதன். முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன். வரவேற்பு செய்தார்.