செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட கேம்ப் ரோடு சிக்னல் அருகே
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி
கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி மின்சார கட்டணம் பால் விலை உயர்வுகளை கண்டித்து அதனை திரும்ப பெற வலியுறுத்தி 65 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சேலையூர் ஜி சங்கர் தலைமையில்
66 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வாணி சுரேஷ் பாபு முன்னிலையில் மாபெரும் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.