கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ச்சியாக நீர் அதிகரித்து வருகிறது. இந்த அணைக்கு கர்நாடகாவில் இருந்து இரசாயன கழிவு நீர் கலந்து வருவதால் அதிகளவு நுரையுடன் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இங்கு இருந்து திறக்க பட்ட நீரானது, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. இந்த அனையானது மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த் தேக்கமாகும். இங்கு ஆண்டுத் தோறும் லட்சகணக்கான மீன்கள் வளர்க்கப் பட்டு பொது ஏலம் நடத்த பட்டு அதன் மூலம் நூறுக்கணக்கான மீன் விவசாயிகள், வியாபாரிகள், பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்பெண்ணை ஆற்றில் இரசாயன கழிவு நீர் கலந்து வருவதால் இங்கு வளர்க்க பட்டு வரும் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து அணையின் கரையோரம் ஒதுங்கியதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இங்கு திறக்கப்படுகின்றன நீரை பருகும் கால்நடைகள் பாதிக்க பட வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர். எனவே தென்பெண்ணை ஆற்றில் இரசாயன கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.



