அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாகன வீதி உலா.
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
அஞ்சுகிராமம் செப் 9
குமரி மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய சதுர்த்தி பெருந்திருவிழா கடந்த 5ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி நேற்று 7ஆம் தேதி சனிக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
நேற்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நாதஸ்வர இசை, 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு தேவார இன்னிசை, பகல் 11:30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், நண்பகல் 12 மணிக்கு மாபெரும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. அன்னதானத்தை ஜம்புலிங்கம் மகன் சிவகுமார் ஆரம்பித்து வைத்தார்.
மாலை 4 மணி ஸ்ரீ அழகிய விநாயகருக்கு வாகனத்தில் சிறப்பு அலங்கார பூஜையும், அதனைத் தொடர்ந்து நாத இசை, சிங்காரி மேள ஓசை, கைலாச வாத்தியம், மானாட்டம், மயிலாட்டம், வான வேடிக்கை முழங்க ஸ்ரீ அழகிய விநாயகர் வீதி உலா வருதல் நடைபெற்றது.
ஆலய அறங்காவல் குழு தலைவர் நடராஜன் தலைமையில், செயலாளர் தங்கபாண்டியன் ஆசிரியர், பொருளாளர் மேட்டுக்குடி முருகன் ஆகியோர் முன்னிலையில் ஆலய குருக்கள் கணேச பட்டர், சீனிவாசன் ஆகியோர் விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து வீதிஉலாவை முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் ஆலயத்தில் இருந்து தொடங்கி தெற்கு பஜார் மேற்கு பஜார் மற்றும் வடக்கு பஜார் வரை சென்று மீண்டும் ஆலயத்திற்கு திரும்பியது. ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வாகனத்திற்கு உற்சாக வரவேற்பு கொடுத்து, பூ, பழம், பன்னீர், இளநீர், மாலை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
ஊர்வலத்தில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம், அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ, அஞ்சுகிராமம் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ, அஞ்சுகிராமம் பேரூர் அதிமுக செயலாளர் இராஜபாண்டியன், ஜவஹர்ஸ்டோர் உரிமையாளர் வஸீம், ஜெ பேரவை செயலாளர் வாரியூர் மணிகண்டன், ராஜா ரெஸ்டாரன்ட் உரிமையாளர் மைக்கேல்ராஜ், கவுன்சிலர்கள் வீடியோகுமார், ஜோஸ் திவாகர், ராமச்சந்திரன், காமாட்சி, ஜாக்கி ஷோரூம் உரிமையாளர் உயில் முத்துராஜன், திமுக 13 வது வார்டு செயலாளர் சுயம்புலிங்கம், கண்ணன் ஹார்டுவேர்ஸ் அண்ட் பிளைவுட் உரிமையாளர் அகிலன், பகவதி ஜுவல்லரி உரிமையாளர் லயன் முத்துகிருஷ்ணன், சுந்தரம்பிள்ளை, சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.