தேனி அக் 3:
தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள சுருளி அருவி அருகே சுருளி சாரல் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் சுற்றுலாத் துறை சார்பில் கடந்த சனிக்கிழமை தொடங்கி புதன்கிழமையுடன் ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை வேளாண்மை துறை சுகாதாரத்துறை சமூகத்துறை செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் இதர துறைகளின் சார்பில் பொருள் விற்பனை கண்காட்சி அமைக்கப்பட்டு கடந்த முறை கண்காட்சிகளின் மூலம் 5 லட்சம் பெறப்பட்டது இந்த முறை 8 லட்சத்தை தொட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி என்று மாவட்ட ஆட்சி தலைவர் கூறியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சுருளி சாரல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் மேலும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் வனப்பகுதியினர் சுருளிப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வனத்துறைகளின் எல்லைகளை அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாகவும் முந்தைய காலங்களில் 99 வருட குத்தகைக்கு வனப்பகுதியினர் சுருளிப்பட்டி ஊராட்சி நிலங்களை பயன்படுத்தி வந்தனர் தற்பொழுது குத்தகை காலங்கள் முடிந்து பல வருடங்கள் ஆகியும் இன்னும் வெளியே வராமல் ஆக்கிரமிப்பு செய்து மக்களுக்கு தொல்லை ஏற்படுத்தி வருவதாகவும் மேலும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிக்க வருபவர்களிடம் கட்டணமில்லா சேவையை ஏற்படுத்த வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு தேவையான நிலப் பகுதியினை ஒன்றுக்கு இரண்டாக நாங்கள் தருகிறோம் என்று கூறி நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்தார் இதனை கண்ட பகுதி பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் பட்டிமன்றம் இசை நிகழ்ச்சி பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கி நாட்டுப் பண்ணுடன் முடிவு பெற்றது பிரகதி நாட்டிய கலைச்சங்கம் சார்பில் தமிழ் தாய் வாழ்த்து நாட்டுப்பண் பாடப்பட்டது நிகழ்ச்சியினை சுற்றுலா துறையுடன் இணைந்து மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பா நல்லதம்பி சிறப்பாக செய்திருந்தார் .