தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர்சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட மகளிர் பயனாளிகளுக்கு ஆட்டோக்கள், மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டைகள், வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி, கற்பக விநாயகா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.ரகுபதி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் கலந்துகொண்டு, மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்கள். உடன், மேயர் திலகவதி செந்தில் சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன் துணை மேயர் எம்.லியாகத் அலி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கே.ஸ்ருதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.



