ராமநாதபுரம், டிச.24-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
சிறிய விநியோகஸ்தர்களையும் வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் வாடகை மீதான வரி விதிப்பை திரும்ப பெற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளோம். ஒரே மாதிரியான வரி விதிப்பு நன்றாக இருக்கும். பல லட்சக்கணக்கான விநியோகஸ்தர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு முறைப்படுத்த வேண்டும். பேரிடர் காலங்களில் சில்லறை வணிகம் தான் மக்களுக்கு உதவும் ஆன்லைன் வர்த்தகம் முன் வராது. உணவு பாதுகாப்புச் சட்டத்தில் சேதமடைந்த மற்றும் காலாவதியான பொருட்களை தயாரிப்பு நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று உள்ளது ஆனால் நடைமுறையில் திரும்பப் பெறுவதில்லை. காலாவதியான பொருட்களை திரும்பப் பெற அரசு ஆவண செய்ய வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுக்குழு மிக சிறப்பாகவும் எழுச்சியோடும் நடக்க ஒத்துழைப்பு நல்கிய இராமநாதபுரம் மாவட்ட சங்கத்திற்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு கூறினார்.
பொதுக்குழு கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மாநில பொருளாளர் பழனியப்பன், நிர்வாகி செல்லமுத்து உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தனர். பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.