திருப்பத்தூர்:ஜூன்:18, திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையாமுத்தூர் கோனேரி குப்பம் பொம்மி குப்பம் குடும்பம் பள்ளி தண்ணீர் பந்தல் மற்றும் மாடப்பள்ளி ஆகிய இடங்களில் செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது அவைகளில் கடந்த சில தினங்களாக உபகரணங்கள் (RRU மற்றும் BATTERYS) போன்ற சில பொருட்கள் காணாமல் போவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை சிசிடிவி கேமராக்கள் தொழில்நுட்ப உதவிகளுடன் விசாரணை செய்யப்பட்டது குற்ற சம்பவத்தில் தொடர்புடைய பொம்மி குப்பம் பகுதியினைச் சேர்ந்த சம்பத் வயது-29, பெருமாள் வயது-28, விஜயகுமார் 32, நாட்றம்பள்ளி பகுதி இணைச் சேர்ந்த சந்துரு வயது 35 பெருமாள் 27, புஷ்பராஜ் 24 மற்றும் தினேஷ் 24, ஆகிய நபர்களை கைது செய்து விசாரணை செய்ததில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை செய்து வரும் உத்ரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தானேஷ் வயது 34 என்ற நபரிடம் திருடப்பட்ட பொருட்களை கொடுக்கப்பட்டதாகவும் அப்பொருட்களை தானேஷ் வெளிமாநிலங்களில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து தானேஷை கைது செய்து அவரிடம் இருந்து திருடு போன உபகரணங்கள் RRU (REMOTE RADIO UNITS) மற்றும் BATTERYS ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் உரிமையாளர்கள் செல்போன் டவர் அமைந்துள்ள இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாவலர்கள் அல்லது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இதுபோன்ற குற்ற செயல்கள் நடக்காமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தி உள்ளார்.