அரியலூர்,அக்;11
அரியலூர் – பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை பாஜக தெற்கு ஒன்றியத்தில் ஹரியானா மாநிலத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை தொடர்ந்து செந்துறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெற்கு ஒன்றிய தலைவர் எஸ்.கே.புயல்செல்வம் தலைமையில் வெடி வெடித்து கொண்டாடினார்.
கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள் பழனிச்சாமி, பரமசிவம், ராஜநிலா, பிரகாஷ், பூபதி, சூரியா, மணி.சத்தியமூர்த்தி, பொன்னுமணி, சிலம்பரசன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்துக்கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்