மதுரை
ஆயுதப்படை மைதானத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியின் ஏற்பாட்டில்
2024 – 2025-ம் கல்வியாண்டின் பள்ளிகல்வித்துறையால் நடத்தப்படும் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற மதுரை நிர்மலா பெண்கள் மேனிநிலைப் பள்ளி மாணவிகள் மாணவியருக்கான தடகள போட்டியில் 181 புள்ளிகள் பெற்று
ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
இதனை போற்றும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர்
மற்றும் ஆசிரியர் பெருமக்கள் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.