தஞ்சாவூர். செப்.9
தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சிறப்பு தலைவர் கு. பாலசுப்ரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கா னா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொண்டு வந்து விட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மத்திய அரசு ஊழியர் களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதி ய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் தமிழ்நாடு அரசோ, இது வரை புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.அரசு ஊழியர் களின் பல ஆண்டு கோரிக்கையை இன்னும் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது . உடனடியாக அரசு ஊழியர்களின் கோரிக்கை யான பழைய ஓய்வூதியத் திட்டத் தை தமிழகத்தில் அமல்படுத்த முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வூதியம் ரூபாய்.2000 பெறு பவர்களுக்கு அதுவிலைப்படியும் அதனோடு சேர்த்து வழங்க வேண்டும். அரசுத் துறையில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றி னாலே நிரந்தர படுத்த வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் சத்துணவு, அங்கன்வாடி, டாஸ்மாக், பட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல ஆண்டுகள் பணி புரிந்தவர்கள் கூட இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை.
அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தூய்மை பணியாளர் களுக்கு மாநில நிதியில் இருந்தும், தூய்மை காவலர்களுக்கு மத்திய நிதியிலிருந்தும் ஊதியம் வழங்கப் படுகிறது. இவர்களுக்கு ஒரே பணி தான் என்றாலும் ஊதியம் விஷய த்தில் முரண்பாடுகள் உள்ளன. எனவே ஊதிய முரண்பாடுகளை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்திற்கு ரூபாய்.13500 கோடி ஒதுக்கப்பட்டு ள்ளது. 3 துறைகளின் கீழ் பொது விநியோகத் திட்டம் இயங்குகிறது. அதனை மாற்றி ஒரு துறையின் கீழ் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். சரியான முறையில் தரமான பொருட்களை சரியான எடையில் அங்காடிக்கு கொடுக்க வேண்டும்.நேர்மையான முறையில் பதவி உயர்வு செய்ய வேண்டும். அரசாணைப்படி இடம் மாறுதல் செய்ய வேண்டும்.
மதிய உணவு திட்டத்தில் பணி செய்பவர்களையே காலை உணவு திட்டத்திற்கும் பயன்படுத்த வேண்டும்.
இதுபோன்ற 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்க ளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அதை தொடர்ந்து அடுத்த மாதம் ( அக்டோபர் ) 17-ந்தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.
இந்த இரண்டு கட்டபோராட்டங்களி லும் தீர்வு எட்டப்படவில்லை என்றால் நவம்பர் மாதத்தில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநிலத் தலைவர் சுகமதி, துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.