ஊத்தங்கரை அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகம் ஆக்கிரமிப்பால் இளைஞர்கள் பாதிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி நடூர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பஞ்சாயத்து இளைஞர்களின் நலன் கருதி கடந்த 2008 ஆம் ஆண்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகம் கட்டப்பட்டது. அந்த கிராமத்தை சுற்றியுள்ள கோவிந்தாபுரம், கொம்மம்பட்டு உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தினந்தோறும் தினசரி மற்றும் வார நாளிதழ் படிப்பதற்கும், சுய அறிவை மேம்படுத்த பொது அறிவு புத்தகங்களை படிப்பதற்கும், மேலும் போட்டித் தேர்வுக்கு தேவையான புத்தகங்களை படிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த கிராமத்தில் உள்ள செல்வி (வயது 52) என்பவர் நூலகம் கட்டப்பட்ட இடம் எனக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது எனவும் அதற்கான உரிய ஆவணங்கள் என்னிடம் இருப்பதாக கூறி நூலகத்திற்குள் ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் அப்பெண்ணிடம் இந்த இடம் மற்றும் கட்டிடம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சொந்தமான இடத்தில்தான் நூலகம் கட்டப்பட்டுள்ளது குடியிருப்பை காளி செய்ய வேண்டும் என்று கூறியும் அப்பெண் இடத்தை காலி பண்ணவில்லை என்பதால். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அரசு இடத்தை ஆக்கிரமித்து உள்ள அப்பெண்ணை அகற்றி நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.